எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம், ஆக.2: எல்ஐசி.யில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஒன்றிய, மாநில நிறுவனங்களில் உள்ளது போல் எல்ஐசி ஊழியர்களுக்கும் குடும்ப பென்ஷன் 30 சதவீதம் வழங்க வேண்டும். மெடிக்கல் பாலிசியில் ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பாக அகில இந்திய பென்சனர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் என கூட்டு போராட்ட குழு சார்பாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பிரதாப் விளக்கி பேசினார். அகில இந்திய பென்சனர் சங்கம் சார்பாக பாஸ்கரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பாக விக்னேஷ், முதல் நிலை அதிகாரிகள் சங்கம் சார்பாக ஈஸ்வரன் பேசினர்.கிளை பொறுப்பாளர் ராஜேஷ் செல்வகுமார் நன்றி கூறினார். இதில் வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள், ஊழியர்கள் என கலந்து கொண்டனர்.

 

The post எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: