கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்

 

வேதாரண்யம், ஜூலை 31: வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை கோடி முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற செடில் உற்சவத்தில் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா கடந்த 21ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு எண்ணை, பால், தயிர், இளநீர், மஞ்சள், திரவியம், பழங்கள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனையுடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று 9ம் நாள் நிகழ்வில் 21ம் ஆண்டாக செடில் உற்சவம் நடைபெற்றது. இந்த செடில் திருவிழாவில் கோடிக்கரை, கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி, ஆறுகாட்டுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தங்களது குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் மாரியம்மனுக்கு பால்குடம் காவடி எடுத்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

The post கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: