முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் தோழி விடுதிகள்-முன்னேறும் மகளிருக்கான முகவரி

சென்னை: தோழி விடுதிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தோழி விடுதிகள்- இது முன்னேறும் மகளிருக்கான முகவரி’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தோழி விடுதிகள் – இது முன்னேறும் மகளிருக்கான முகவரி. மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது. டாக்டர் நடேசனாரின் ‘திராவிடர் இல்லம்’ போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் தோழி விடுதிகள்-முன்னேறும் மகளிருக்கான முகவரி appeared first on Dinakaran.

Related Stories: