திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய வேல் சின்னம்

சென்னை: திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்றான கந்தசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச ஓய்வுக் கூடம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோயிலை ஒட்டியுள்ள சரவணப்பொய்கை குளத்தில் பக்தர்கள் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயிலின் பிரதான கோபுரத்தில் ஒளிரும் வகையில் வேல் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். இது சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வேலை கோபுரத்தின் மேற்கு திசையில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய வேல் சின்னம் appeared first on Dinakaran.

Related Stories: