ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருமுக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்: ஆண்டாள், ரங்கமன்னார் தரிசனம்

 

திருவில்லிபுத்தூர், ஜூலை 25: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 22ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வைபவம் நேற்று நடைபெற்றது. இதற்காக ஆண்டாள், ரங்க மன்னார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க திருவில்லிபுத்தூர் வாழைகுளம் தெரு பகுதியில் உள்ள தீர்த்த வாரி மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்திற்கு அருகில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பிறகு தீர்த்த வாரி மண்டபத்தில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையை காண்பதற்காகவும் சாமி தரிசனம் செய்வதற்காகவும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

The post ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருமுக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்: ஆண்டாள், ரங்கமன்னார் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: