தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி

திருத்தணி: தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. கல்லூரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முன்னதாக முதல்வர் வேதநாயகி வரவேற்றார். துணை முதல்வர் பொற்செல்வி முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக ஊக்குவிப்பாளர் சரவணன் பங்கேற்று பேசும்போது, மாணவர்களை விட மாணவிகள் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். கல்லூரி படிப்பு உங்களை உயர்த்துவதுடன், உயர்பதவிகளுக்கு செல்ல உறுதுணையாக இருக்கிறது. மாணவியர் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் படித்தால் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடையலாம் என பேசினார்.

இதற்கு முன்னதாக, கல்லூரியில் சேர்ந்துள்ள இளங்கலை பாடப் பிரிவு பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பிகாம் ஜெனரல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கு, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர், ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.

The post தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: