எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெங்களூரு பயணம்: சோனியா காந்தி அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார்

சென்னை: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறார். சோனியாகாந்தி அளிக்கும் விருந்திலும் அவர் பங்கேற்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 26 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் பெங்களூரில் இரவு தங்குகிறார். நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமை, பிரசார உத்திகள், பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெங்களூரு பயணம்: சோனியா காந்தி அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: