திண்டுக்கல் அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் குளத்தூரை அடுத்த காளனம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் பவானி (17). இவர் பத்தாம் வகுப்பு முடித்து கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக பவானி மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவானி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாடிக்கொம்பு அடுத்த ஓடைப்பட்டி காட்டு பகுதி மரம் ஒன்றில் துாக்கிட்டு இறந்த நிலையில் ஒருவர் தொங்கி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் ஆர்விஎஸ் நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை விடுதலை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று அங்கேயே வேலையும் செய்து வந்த சிறுமலையை சேர்ந்த சந்திரசேகர் (வயது 30) என்பதும், இவர் கடந்த ஜூலை 3ம் தேதி விடுதியில் இருந்து தப்பித்து சென்று விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: