ஊட்டச்சத்து மிக்க 5 வகையான பழச்செடிகள் தொகுப்பு: தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வேண்டுகோள்

திருவள்ளூர்: ஊட்டச்சத்து மிக்க 5 வகையான பழச்செடி தொகுப்புள் 75 சதவிகித மானியத்தில் வழங்ப்பட உள்ளது. தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி விடுத்துள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 5 வகையான மா-ஒட்டு, கொய்யா பதியன், நெல்லி ஒட்டு, எலுமிச்சை மற்றும் சீத்தா செடிகள் ஆகிய பழச்செடிகள், உள்ளடக்கிய தொகுப்பு 2023 – 24ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 104 கலைஞர் திட்ட கிராமங்களில் 3,1200 எண்கள் வழங்கப்படவுள்ளது.

ஒரு தொகுப்பின் முழு விலை ரூ.200, பயனாளிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் ரூ.150 ற்கு வழங்கப்படவுள்ளது. இந்த தொகுப்பினை பெற்று பயன்பெற விரும்புவோர் உடனடியாக தங்களின் ஆதார் மற்றும் கைபேசி எண் விவரங்களை, உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து, தொகுப்பு ஒன்றுக்கு ரூ.50 மட்டும் செலுத்தி தங்களின் வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகி தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post ஊட்டச்சத்து மிக்க 5 வகையான பழச்செடிகள் தொகுப்பு: தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: