கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

கரூர், ஜூலை11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை குறித்து பேசினார். நிர்வாகிகள் நடராஜன், பழனி, முருகேசன் அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். பிற சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.

மாநில செயலாளர் தனபாக்கியம் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொருளாளர் பிச்சையம்மாள் நன்றி கூறினார். முறையான சிறப்பு பென்சன் ரூ.6750 டிஏவுடன் வழங்க வேண்டும். உண்ணாவிரத கூட்ட அமர்வில் ஒப்புக் கொண்டபடி மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ.25ஆயிரம் வழங்க வேண்டும். காலப் பயன்களை ஒய்வு பெறும் அன்றே முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: