முத்துப்பேட்டையில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டையில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கான பேரூராட்சி சார்பில் முறையான குப்பை கிடங்கு இல்லை. இதனால் கிழக்குக் கடற்கரை சாலையோரம் போக்குவரத்து இடையூறாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி சார்பில் சென்ற ஆண்டு தெற்கு காடு அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post முத்துப்பேட்டையில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: