வேன் கவிழ்ந்து பெண் பலி

 

ராமநாதபுரம்,ஜூலை 6: திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி மனோகரன் ஏற்பாட்டின் பேரில் செஞ்சி,சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 16 பேர் வேனில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று முன்தினம் வந்துள்ளனர். இரவு திருச்சி மார்க்கமாக ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வேன் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்தது.

இதில் செஞ்சியை சேர்ந்த அமுல்(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் தன்ராஜ் மற்றும் நவீன்(6), ரித்தீஸ் (14) சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர். தேவிப்பட்டிணம் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர் களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post வேன் கவிழ்ந்து பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: