ஆதிகைலாசநாதர் சுவாமி கோயிலில் சனி பிரதோஷம்

பட்டுக்கோட்டை, ஜூலை 2: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள ஆதிகைலாசநாதர் சுவாமி கோயிலில் மஹாநந்தி பகவானுக்கு நேற்று மாலை மஞ்சள் பொடி, திரவிய பொடி, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, சொர்ணாபிஷேகம், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் ொடர்ந்து மஹா நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, பச்சரிசி, வெல்லம் நெய்வேத்தியம் செய்து வில்வ அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பல்லக்கில் முன்செல்ல ஆதி கைலாசநாதர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.

The post ஆதிகைலாசநாதர் சுவாமி கோயிலில் சனி பிரதோஷம் appeared first on Dinakaran.

Related Stories: