மாதக் கணக்கில் இருளில் மூழ்கித் தவிக்கும் போதமலை கிராம மக்கள்: மின்சாரம் இன்றி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கவலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இல்லாமல் 3 மலை கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளதால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன. ராசிபுரம் அடுத்த வடுகம் பகுதியில் சுமார் 3,9000 அடி உயரத்தில் உள்ள போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை உள்ளிட்ட 3 கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு இந்த மலை கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போதமலையில் மின்மாற்றி பழுதடைந்தால் 3 கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

ஒரு மாதமாகியும் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது நீக்கப்படாததால் ஒரு மாதமாக 3 கிராமங்களும் இருளில் மூழ்கியுள்ளது. மின்மாற்றி பழுது தொடர்பாக புகார் பெறப்பட்டதும் பழுதான மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கும் மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்மாற்றி வர ஒரு மாதமான நிலையில் மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மின்வாரிய ஊழியர்களை பயன்படுத்தி மேலே கொண்டு செல்ல தாமதமாவதாக தெரிவிக்கின்றன. மின்சாரமின்றி இருளில் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறும் கிராமத்தினர் விளக்கு ஏற்றி கூட போதிய மண்ணெண்ணெய்யை ரேஷன் கடைகளில் வழங்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

The post மாதக் கணக்கில் இருளில் மூழ்கித் தவிக்கும் போதமலை கிராம மக்கள்: மின்சாரம் இன்றி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கவலை appeared first on Dinakaran.

Related Stories: