க.பரமத்தி பகுதி கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் போலி டாக்டர்கள் நடவடிக்கை எடுக்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்

க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், இராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி, ஆகிய 30-ஊராட்சிகள் உள்ளன. இதில் உள்ள கிராம புற பகுதிகளில் தடையின்றி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து உலா வருவதை கண்டறிந்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர். மருத்துவத்தில் அலோபதி மட்டுமல்லாமல், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றில் படிக்காமல் மருத்துவம் பார்க்கும், சிலர் கிராமங்களில் இன்றைக்கும் உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள இவர்கள் படித்து முறைப்படி சிகிச்சை செய்ய வரும் டாக்டர்களுக்கு போட்டியாக தொழிலில் கொடி கட்டி பறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உண்மையான சிகிச்சை முறையை கூறும் கால்நடைத்துறை டாக்டர்களை, கிராம மக்கள் உதாசினப்படுத்தும் போக்கும் நடைமுறையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் காலங்களில் அவசர தேவைக்கு இரவு அல்லது பகல் நேரங்களில் மருத்துவரை தேடி 4சக்கர வாகனங்களுக்கு வாடகை கொடுத்து அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு சிலர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அவசர தேவைக்கு நாட வேண்டியுள்ளது என்றனர்.

 

The post க.பரமத்தி பகுதி கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் போலி டாக்டர்கள் நடவடிக்கை எடுக்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: