அமைச்சரிடம் மனு

சிவகங்கை: தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க சிவகங்கை கிராபைட் ஆலை கிளைத்தலைவர் பாலு, செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங் கம் தென்னரசுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவன ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2018ம் ஆண்டு முதல் 7சதவீத அகவிலைப்படி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கனிம நிறுவனங்கள் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. எனவே 42 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலுக்கு அனுமதி அளித்து அகவிலைப்படியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: