எஸ்டிபிஐ வடக்கு தொகுதி கூட்டம்

மதுரை, ஜூன் 27: எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு தொகுதி கூட்டம், தொகுதி தலைவர் பாஷா தலைமையில் நேற்று நடந்தது. மாநிலச்செயலாளர் நஜ்மா பேகம், மாவட்டத்தலைவர் பிலால்தீன், அமைப்பு பொதுசெயலாளர் பக்ருதீன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். கட்சியில், தீவிர உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு, வடக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மக்கள் அடிப்படை பிரச்னை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதேபோல் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் கரீம் தலைமையில் நடந்தது. மாவட்டத்தலைவர் பிலால்தீன், செயற்குழு உறுப்பினர் சீனிசிக்கந்தர் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் செயலாளர் செல்வக்கனி நன்றி கூறினார்.

The post எஸ்டிபிஐ வடக்கு தொகுதி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: