கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே நடந்த மக்களை தேடி மருத்துவ முகாமில் ஒரு வாரத்தில் 5000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் கிராமத்தில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தொற்றா நோய் கண்டறிதல் முகாமை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதித்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து வரும் இந்த சோதனையில் நேற்று முன்தினம் வரை சுமார் 5000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அந்த இடத்திலேயே மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்தார். கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சீர்காழி அருகே எடக்குடி வடபாதியில் கீழே சாய்ந்து விழும் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் சிறந்த கல்வி சேவைக்கான விருது கலெக்டர் துவக்கி வைத்தார் மக்களைத் தேடி மருத்துவ முகாமில் ஒரு வாரத்தில் 5000 பேருக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.