சாரண இயக்க தொடக்க விழா

அரூர்: கம்பைநல்லூர் ராம் பள்ளியில் சாரண இயக்கத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் இயக்குநர் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி முன்னிலை வகித்தனர். விழாவினை முதல்வர் சாரதி மகாலிங்கம் மற்றும் மாவட்ட சாரணர் பயிற்சி தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில், தர்மபுரி மற்றும் அரூர் சாரண உறுப்பினர்கள், கணேசன், சுந்தரராஜன், ஆறுமுகம், கலையரசன் மற்றும் மலர்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவினை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, சாரண ஆசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சாரண இயக்க பயிற்சியாளர்கள், மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

The post சாரண இயக்க தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: