முதல்வரின் சீரிய திட்டங்களால் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, ஜூன் 25: காரைக்குடியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் சிறந்த மார்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பங்கேற்றார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி பேசுகையில், பொது தேர்வில் 100 சதவீத வெற்றி பெறுவது என்பது பெருமையான விசயம். பின்னடைவில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் வெற்றி பெற செய்துள்ளது சிறப்பானது. தமிழில் சரளமாக பேச, எழுத தெரிந்துள்ளது போல் ஆங்கிலத்திலும் சரளமாக பேச, எழுத தெரியவேண்டும் என்றார்.

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையும் வளர்ச்சி பெற வேண்டும் என பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார்கள். முதல்வரின் திட்டங்களால் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி அடைந்துவருகிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 2வது இடம், பிளஸ் 2வில் 6வது இடம் நமது மாவட்டம் பெற்றுள்ளது பெருமையான விசயம். தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. தவிர கலை, நடனம், இசை என அனைத்திலும் நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

மாணவர்களை ஊக்கப்படுத்த, உற்சாப்படுத்த என்றும் துணையாக இருப்போம் என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏகள் மாங்குடி, தமிழரசி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர்கேஎஸ்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் சீரிய திட்டங்களால் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: