பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு..!!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். அதன்படி, நிதீஷ்குமார்(பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் ), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் சிங் மான் (பஞ்சாப்) ஆகிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சரத் பவார். லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களும் பங்கேற்றிருந்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் உத்தவ்தாக்கரே, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, டி.ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இல்லத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

The post பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: