கொடைக்கானலில் விழிப்புணர்வு வாரி அள்ளிய குப்பைகளில் வண்ணத்துப்பூச்சி உருவம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் சுற்றுலா இடங்களில் குவிந்துள்ள குப்பைகளை சேகரித்து, வண்ணத்துப்பூச்சி உருவத்தை உருவாக்கி தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில், நகரின் எழிலை ரசிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சிலர் குப்பைகளை அதிக அளவில் வீசி செல்கின்றனர். இதனால் இப்பகுதி ஒரு குப்பைக்காடாக மாறுகிறது.

இந்த பகுதியை அவ்வப்போது கொடைக்கானலை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் தூய்மைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரந்தோறும் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.இதன்படி நேற்று சிட்டி வியூ பகுதியை தன்னார்வலர்கள் தூய்மைப்படுத்தினர்.

அப்போது அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பயன்படுத்தி வண்ணத்துப்பூச்சி உருவத்தை ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் கழிவுகளையும்,
குப்பைகளையும் இந்த பகுதியில் கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த வித்தியாசமான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post கொடைக்கானலில் விழிப்புணர்வு வாரி அள்ளிய குப்பைகளில் வண்ணத்துப்பூச்சி உருவம் appeared first on Dinakaran.

Related Stories: