அமித் ஷா ஜம்மு பயணம்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று ஜம்மு புறப்பட்டு செல்கிறார். இன்று ஜம்மு புறப்பட்டு செல்லும் அமித் ஷா பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். சம்பாவில் ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். பிற்பகல் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழாவில் அமித் ஷா கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஒன்றிய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள விடஸ்டா நிகழ்ச்சியிலும் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

The post அமித் ஷா ஜம்மு பயணம் appeared first on Dinakaran.

Related Stories: