காங்கிரஸ் எம்பி மீது விமர்சனம் பாஜ பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி எம்பி விஜய்வசந்த். இவரைபற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பாஜ பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி வர்த்தக அணி மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தற்போது சமூக வலைதளங்களில் தரமற்ற வார்த்தைகளால் தலைவர்களை விமர்சிக்கின்றனர். அந்த வழக்கத்தில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்தை, தகாத வார்த்தைகளால் பாஜ பிரமுகர் சுரேஷ் என்பவர் விமர்சனம் செய்துள்ளார். அந்த நபர் யார் என்பதை கண்டறிந்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். புகாரின்போது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அவளூர் நாகராஜ் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

The post காங்கிரஸ் எம்பி மீது விமர்சனம் பாஜ பிரமுகர் மீது எஸ்.பி.,யிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: