ஜூன் 26ம் தேதி நடராஜர் உலா

பழநி, ஜூன் 21: பழநி கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலில் வரும் 26ம் தேதி ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும்.

தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து ரதவீதிகளில் நடராஜர்-சிவகாமி அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post ஜூன் 26ம் தேதி நடராஜர் உலா appeared first on Dinakaran.

Related Stories: