ராகுல்காந்தி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவேண்டும்

சுரண்டை: தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் எனது தலைமையில் இன்று (19-6-2023) காலை 9 மணியளவில் சுரண்டையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 10 மணி அளவில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு, 10.15 மணியளவில் தென்காசி காந்தி சிலை அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கல், 11 மணி அளவில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் தென்காசி மாவட்ட கமிட்டி துணைத்தலைவர்கள், வட்டார, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது பகுதியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post ராகுல்காந்தி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: