ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆறுமுகநேரி, ஜூன் 17: ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமத்துடன் ஆனி உத்திர திருவிழா ஆரம்பமானது. அன்று மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப்பாடு, தேவார திருமுறை, பாராயணம், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் கொடியேற்றத்தை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆனி உத்திரப்பெருவிழா பூஜையை ஐயப்ப பட்டர் குழுவினர் செய்தனர். இதில் கோவில் மணியம், சுப்பையா, தொழிலதிபர்கள் தவமணி பூபால் ராஜன், செல்வ பெருமாள், நடராஜன் பேராசிரியர் அசோக், குமார், தெரிசை ஐயப்பன், அமிர்தராஜ், தங்கமணி, கற்பக விநாயகம் மற்றும் இளைய பெருமாள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் திருநாவுக்கரசர் சுவாமிகளின் உழவாரப்பணி உலா, யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் இரவில் பெலி விநாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சப்பரபவனி, பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. பெருவிழாவின் 10வது நாள் நிறைவாக 25ம் தேதி மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

The post ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: