வேறு ஆறு மல்யுத்த வீராங்கனைகளின் புகாரின் பேரில் இரண்டாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், சிறுமி அளித்த புகாருக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் பிரிஜ்பூஷன் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் தாக்கலான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்பான வழக்கில் ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் 1,500 பக்க குற்ற பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.
அதில்,ஆபாசமாக சைகை செய்வது தொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354ஏ, ஒரு பெண்ணிற்கு விருப்பமில்லாமல் இருந்தும் அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்த போதும் தொடர்ந்து அந்த பெண்ணை பின் தொடர்வது தொடர்பான பிரிவு 354டி, ஒரு பெண்ணின் கவுரவத்துக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தாக்குவது அல்லது தாக்க முயற்சிப்பது ஆகியவை தொடர்புடைய பிரிவு 354, கடுமையான காயத்தை உண்டாக்கக்கூடிய சட்டப்பிரிவு 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரிஜ் பூஷன் குற்றம் செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இந்திய விளையாட்டு துறைக்கு கருப்பு தினம்’
அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிடுகையில், பிரிஜ் பூஷன் சரண் மீது சிறுமி கொடுத்த பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் மகள்களுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றும் இல்லாதது போல் ஆக்கும் வகையில் மோடி அரசு குப்பையில் போட்டு மூடி புதைத்துள்ளது. பாஜ கட்சி பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என முன்பு கூறியது.
தற்போது பெண் குழந்தைகளை மிரட்டுேவாம், பிரிஜ் பூஷனை காப்பாற்றுவோம் என்பது புதிய கோஷமாக உள்ளது. பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டது நாட்டின் விளையாட்டு துறைக்கு கருப்பு தினம். பாஜவின் அரசியலால் நாட்டின் சட்டம் நிலைகுலைய வைக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரிக்கு மிகவும் பிடித்தவரை காப்பாற்ற அரசின் அனைத்து இயந்திரங்களும் வேகமாக செயல்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; பாஜ எம்.பிக்கு எதிராக 1500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: போக்சோ வழக்கை கைவிட டெல்லி போலீஸ் அறிக்கை appeared first on Dinakaran.
