அரிமளம், திருமயம் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

திருமயம்,ஜூன் 15: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தாமதமின்றி பாடநூல் வழங்கிட ஏற்கனவே ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறந்ததும் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமயம் அருகே உள்ள சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பரிசுத்தம், விஜயசாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரிமளம், திருமயம் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: