சிறப்பு மருத்துவ முகாம்

 

திருப்போரூர்: ஸ்கார்ப் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஸ்கார்ப் நிறுவன பிரதிநிதி ஐங்கரன் தலைமை தாங்கினார். செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு கண், காது, மூக்கு, பொது மருத்துவம், மகப்பேறு ஆலோசனை, நெஞ்சக நோய், நீரிழிவு, முதுகுத்தண்டு சிகிச்சை, முட நீக்கியல், காய்ச்சல், முதுமை கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிகிச்சையும், ஆலோசனையும், இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

The post சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: