மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

சென்னை: மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாட்டின் நம்பிக்கை இணையத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் உள் பயிற்சி தேவைகள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்களின் மின் ஆளுமை பயிற்சிக்காக, சென்னை, அண்ணா சாலையில் பி.டி.லீ செங்கல்வராயா கட்டிடத்தின் 7வது மாடியில் 2750 சதுர அடியில் ‘மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாட்டின் நம்பிக்கை இணையம் \\”e-Pettagam – Citizen Wallet\\” கைபேசி செயலி சுமார் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் (தலைமையகம் மற்றும் மாவட்டம்) மற்றும் பிற துறை அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பயிற்சி அளிக்கும். அதன்படி, மின் அலுவலக பயிற்சி, G2C சேவைகள் பயிற்சி/மின் மாவட்ட மேலாளர்களுக்கான பயிற்சி, மென்பொருள் உருவகப்படுத்துதல் பயிற்சி, கைபேசி செயலி உருவகப்படுத்துதல் பயிற்சி, புவிசார் தகவல் அமைப்பு பயிற்சி, மின் கொள்முதல் பயிற்சி, திறன் மேம்பாட்டிற்கு தேவைப்படும் பிற பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சி வழக்கமான பயிற்சிகளில் இருந்து மாறுபட்ட கணினி அடிப்படையிலான செய்முறை பயிற்சி. செய்முறை பயிற்சி, கணினி அடிப்படையிலான பயிற்சி, பல்முறை பயிற்சி (விரிவுரை மற்றும் செயல்முறை) ஆகிய பயிற்சிகளை மாவட்டங்களில் முதன்மை பயிற்சியாளர்களுக்கு காணொலி முறையில் பயிற்சி மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம் அளிக்கும்.

The post மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: