பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களிடையே கமல்ஹாசன் பேசியதாவது: தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன உதவிகளையும் செய்வேன் என்றார்.

The post பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்: கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Related Stories: