நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நெய்தல் கோடை விழா 2 நாட்கள் நடக்கிறது

 

நாகப்பட்டினம்,ஜூன்12: நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நெய்தல் கோடை விழா நடைபெறும் என கலெக்டர் ஜனானிடாம் வர்கீஸ் கூறினார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் நெய்தல் கோடை விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு விழா வரும் 24, 25ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலத்துறை ஆகிய துறைகள் இணைந்து நெய்தல் கோடை விழாவை நடத்துகிறது. இரண்டு தினங்களில் மாலை 5 மணி முதல் பள்ளி மாணவர்களின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், தோட்டக்கலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலத்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, வாழ்ந்துகாட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், ஆவின் நிறுவனம் ஆகிய துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றார்.

The post நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நெய்தல் கோடை விழா 2 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: