அரியலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு ரூ.61.26 லட்சத்தில் தீர்வு

 

அரியலூர், ஜூன்11:அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.61.26 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது.மேற்கண்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுத் தலைவருமான கிறிஸ்டோபர் தலைமை வகித்து, தொடக்கி வைத்தார்.

இதில் அரியலூர் நீதிமன்றங்களில் ஏற்படுத்தப்பட்ட அமர்வில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், நீதித்துறை நடுவர் அறிவு, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன், செயலர் முத்துகுமரன், செல்வராஜ்.ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட அமர்வில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் அழகேசன், சார்பு நீதிபதியும், சட்டப் பணிகள் குழுத் தலைவருமான லதா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசன், நீதித்துறை நடுவர் ஜே.எம் -1 ராஜசேகரன்.

செந்துறை நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான அக்னஸ் ஜெப கிருபா, வழக்குரைஞர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 542 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இதில் சிவில், மோட்டார், வங்கி மற்றும் ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட 149 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.61 லட்சத்து 26 ஆயிரத்து 704 க்கு தீர்வு காணப்பட்டது.இந்த மக்கள் நீதிமன்றத்தில், அரசு வக்கீல்கள், வக்கீல்கள்,காவல் துறையினர், அரசு அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு ரூ.61.26 லட்சத்தில் தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: