மதுரையில் உலக சாதனை முயற்சி; கலைஞரின் உருவ வடிவில் நின்று தூய்மைப் பணியாளர்கள் அசத்தல்: 2,752 பேர் பங்கேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் 2,752 தூய்மைப் பணியாளர்கள் கலைஞரின் உருவ வடிவில் நின்று உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை நடத்தினர். முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மதுரை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா, ஆணையாளர் பிரவீண்குமார் ஆகியேரர் முன்னிலை வகித்தனர்.

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ‘மாநகராட்சியில் பணிபுரியும் 2,752 தூய்மை பணியாளர்கள் கலைஞரின் உருவத்தை போல நின்று சாதனை புரிந்தனர். பின்னர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், தூய்மை உறுதிமொழியேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ‘டிரையம்ப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம்’ உலக சாதனைக்கான விருதை தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மண்டலத்தலைவர்கள் , துணை ஆணையாளர் முஜிபுர் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் உலக சாதனை முயற்சி; கலைஞரின் உருவ வடிவில் நின்று தூய்மைப் பணியாளர்கள் அசத்தல்: 2,752 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: