சோழர் கால கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைவதால் மக்கள் அதிருப்தி: அறநிலையத்துறை உடனடியாகக்கோயிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே சிதிலமடைந்து வரும் நூற்றாண்டு பழமையான கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திருமால்பாடி கிராமத்தில் 12ம் நூற்றாண்டில் பராந்தகசோழன் சோழன் மகன் விக்கிரமசோழனால் கட்டப்பட்ட ஸ்ரீரங்கநாதர் கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

கடைந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனும் 2021ல் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரனும் கோயிலை சீரமைக்க நிதி ஒதுக்குவதாக சட்டப்பேரவையில் அறிவித்தும் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை கோயிலின் மேற்க்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுவதோடு பாரம் தாங்காமல் கற்கட்டிடத்தில் அங்கங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துதுறை உடனடியாக இதில் தலையிட்டு கோயிலை சீரமைக்க வேண்டு என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோழர் கால கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைவதால் மக்கள் அதிருப்தி: அறநிலையத்துறை உடனடியாகக்கோயிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: