பிளஸ் 2 துணைத் தேர்வு, டிடிஎட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஹால்டிக்கெட்டுகளை 14ம் தேதி மதியத்துக்கு பிறகு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி தேர்வு: ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு(தொடக்க கல்வி பட்டயத் தேர்வு) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தேர்வு நடக்க இருக்கிறது.

முதலாம் ஆண்டுக்கான தேர்வு 23ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு ஜூன் 22ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரையும் நடக்கும். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக 12ம் தேதி மதியத்துக்கு பிறகு தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post பிளஸ் 2 துணைத் தேர்வு, டிடிஎட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories: