அரியலூர் அரசு கல்லூரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு

அரியலூர், ஜூன் 9: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூன் 9) முதல் தொடங்குகிறது என அக்கல்லூரியின் முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது:
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கீழ்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 9)ம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், நாளை (ஜூன் 10) அறிவியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 12ம் தேதி வணிகவியல் ஆகியப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதற்கட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு, இடம் கடைக்காத மாணவ, மாணவிகளும், கலந்து கொள்ளாதவர்களும் இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், 3 மார்பளவு புகைப்படம், கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என அக்கல்லூரியின் முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் அரசு கல்லூரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: