புழுதிவாக்கத்தில் பெட்ரோலிய தகன எரிமேடை திறப்பு

ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ பெட்ரோலிய தகன எரிமேடை ெபாதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. பெருங்குடி மண்டலம் 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் மயான பூமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த இடத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ₹55 லட்சம் மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய தகனமேடை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பணி தொடங்கியது.

இந்த பணி நிறைவுபெற்றது. இந்தநிலையில் இந்த திரவ பெட்ரோலிய தகன எரிமேடையின் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதனை 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ.கே.மணிகண்டன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் மோகன வடிவேல், வீரராகவன், சுகாதார ஆய்வாளர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழுதிவாக்கத்தில் பெட்ரோலிய தகன எரிமேடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: