செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

 

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை திட்ட தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை சார்பில், செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணியினை திட்ட தலைமை பொறியாளர் செல்வன் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதியதாக நடந்து வரும் சாலை பணியின் தரம், உயரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சாலை மற்றும் சாலையின் குறுக்கே அமைக்கப்படும் பாலம் கட்டும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார். சாலை இருபுறங்களிலும் உள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, கோட்ட பொறியாளர் லட்சுமிநாதன், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: