வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தாய் மூகாம்பிகை கோயில் கும்பாபிஷேகம்

வாலாஜா: வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு யாகங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவ கடவுளான தன்வந்திரி, மகிஷாசுரமர்த்தினி மற்றும் 468 சித்தர்களுக்கு லிங்கவடிவிலான திருவுருவங்கள் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொல்லூர் தாய் மூகாம்பிகை கோயில் கட்டப்பட்டு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. விழாவுக்கு முரளிதர சுவாமிகள் தலைமை தாங்கினார். இன்று காலை கணபதி யாகம், மஹா சண்டி யாகம் நடந்தது. பின்னர் வேத விற்பன்னர்கள் பங்கேற்று சங்கின் மீது அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை வீரபத்திரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 

The post வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தாய் மூகாம்பிகை கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: