ஈரோடு அருகே தனியார் பால் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே தனியார் பால் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பூந்துறை அடுத்த ராசாம்பாளையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தனியார் பால் தொழிற்சாலையில் பன்னீர், பால் பவுடர் உள்ளிட்ட 18 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பாலை பதப்படுத்துவதற்காக பிரமாண்ட இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள அனுமன் நதி எனப்படும் குரங்கண்பள்ள ஓடையில் கலக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் 50கி.மீ தொலைவிற்கு செல்லும் ஓடை நீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதாகவும் ஓடையின் வழித்தடத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுற்றுசூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூடவும் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்த கோரி ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, காவல்துறை மாற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஈரோடு அருகே தனியார் பால் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: