ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் 168 அப்ரன்டிஸ்கள் : 10ம் வகுப்பு ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

சென்னைக்கு அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ வாகன தொழிற்சாலையில் 10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொைகயுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி Trade Apprentice.

மொத்த காலியிடங்கள் 168.டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்
1. Fitter 32 இடங்கள் (பொது-16, ஒபிசி-8, எஸ்சி-7, எஸ்டி-1).
2. Machinist 36 இடங்கள் (பொது-18, ஒபிசி-11, எஸ்சி-7)
3. Welder (G & E) 24 இடங்கள் (பொது-12, ஒபிசி-7, எஸ்சி-5)
4. Electrician 10 இடங்கள் (பொது-8, எஸ்சி-1, எஸ்டி-1).
5. Machinist 38 இடங்கள் (பொது-24, ஒபிசி-7, எஸ்சி-6, எஸ்டி-1)
6. Welder (G &E) 28 இடங்கள் (ெபாது-17, ஒபிசி-5, எஸ்சி-6)

வயது: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 14.06.2023 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: எக்ஸ்-ஐடிஐ பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐடிஐ அல்லாத பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சி தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஐடிஐ படிக்காதவர்கள் எனில் 2 வருடங்களும், ஐடிஐ முடித்தவர்கள் எனில் ஒரு வருடமும் பயிற்சியளிக்கப்படும். ஐடிஐ படிக்காதவர்களுக்கு முதல் ஆண்டு ₹6 ஆயிரமும், 2ம் ஆண்டு ₹6,600ம் உதவித் தொகையாக வழங்கப்படும். ஐடிஐ படித்தவர்களுக்கு முதல் ஆண்டு ₹7,700ம், 2ம் ஆண்டு ₹8,050ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹100/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு ₹70/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.avni.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2023.

The post ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் 168 அப்ரன்டிஸ்கள் : 10ம் வகுப்பு ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: