தபால் துறையில் 12,828 இடங்கள் : 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் கிராமின் டக் சேவக் பணிகளுக்கு 12 ஆயிரத்து 828 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: Gramin Dak Sevaks.
Gramin Dak Sevaks பணியின் கீழ் 2 வகையான பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1Branch Post Masters (BPM): 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுமக்களுக்கு தபால் துறை சேவைகளை வழங்குவது, பைல்கள் மற்றும் ரிக்கார்டுகளை கையாள்வது, தபால் துறையின் கீழ் செயல்படும் போஸ்ட் பேமென்ட் பேங்க் தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகியவை.
2Assistant Branch Post Master (ABPM): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்டாம்புகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வது/ வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கே சென்று தபால்களை பட்டுவாடா செய்வது/தபால்களை புக்கிங் செய்து பணி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை செய்ய வேண்டும்.

சம்பளம்: BPM: ரூ.12,000- ரூ.29,380; ABPM: ரூ.10,000-24,470.
வயது வரம்பு: 11.06.2023 தேதியின்படி 18 முதல் 40க்குள். 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதுபற்றிய தகவல் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் i) குறைந்தது 100 சதுர அடி பரப்பளவில் கம்ப்யூட்டர் வசதி, இன்டர்நெட் வசதி, மின் இணைப்புடன் கூடிய கட்டிடத்தை GDS- Post Office இயக்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும். ii) கட்டிடம் தரை தளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும். iii) கட்டிடம் மத்திய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடமாக இருப்பது விரும்பத்தக்கது. பணி நியமனம் செய்யப்படுபவர்கள் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும். iv) சைக்கிள்/ இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர்/மாற்றுத்திறனாளிகள்/திருநங்கைகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.06.2023.

The post தபால் துறையில் 12,828 இடங்கள் : 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: