லண்டன் உயிரியல் பூங்காவில் அரியவகை சுமத்ரா புலிகள் பராமரிப்பு: முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்

லண்டன்: இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை சுமத்ரா புலி குட்டிகள் முதன் முறையாக குளத்தில் இறங்கி குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்தோனேசியாவில் சுமத்ரா தீவை பூர்வீகமாக கொண்ட சுமத்ரா புலிகள் அந்நாட்டின் பாலியில் உள்ள எஞ்சி இருக்கும் ஒரே புலி இனமாகும். அரியவகை புலியான சுமத்ரா புலிகள் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த புலிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் லண்டன் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சுமத்ரா புலி என்ற 3 குட்டிகள் முதன்முறையாக குதூகலமாக தண்ணீரில் விளையாடி பொழுது போக்கின. இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் லண்டன் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சுமத்ரா புலி ஒன்று ஈன்ற மூன்று குட்டிகள் முதன் முறையாக குதூகலமாக தண்ணீரில் விளையாடி பொழுது போக்கின. புலி குட்டிகள் விளையாடுவதற்காக பந்துகளும் தண்ணீரில் போடப்பட்டு இருந்தன. தாய் புலியின் மேற்பார்வையில் தண்ணீரில் பந்துகளை எட்டி உதைத்தும், வாயில் கவ்வியும் புலி குட்டிகள் உற்சாகமாக விளையாடினர்.

The post லண்டன் உயிரியல் பூங்காவில் அரியவகை சுமத்ரா புலிகள் பராமரிப்பு: முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம் appeared first on Dinakaran.

Related Stories: