அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லைஎன பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார். அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்ததின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என செய்திகள் வெளியானது.

இதுகுறித்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அளித்த பேட்டி: அம்பத்தூர் ஆவினில் 50க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை ஆவினில் அனுமதிப்பதில்லை. அதற்கான வருகை பதிவேடு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் ஒரே எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழித்தட ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

2 பிரிவில் வழக்கு பதிவு: வேலூர் ஆவின் விற்பனை பிரிவு உதவி பொதுமேலாளர் சிவக்குமார் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்படி பால் வண்டியின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் டிரைவர் விக்கி ஆகிய இருவர் மீது போலீசார் ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை appeared first on Dinakaran.

Related Stories: