திருப்பூர் அருகே தனியார் சாய ஆலை கழிவுகளால் சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு: பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் சாய ஆலை கழிவுகளால் சிறார்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் ஆலையில் ஆணையர் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெங்கமேடு பகுதியில் தனியார் சுத்திகரிப்பு ஆலையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நேற்று இரவு நச்சு வாயு கலந்த கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு துர்நாற்றத்தை காரணமாக வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 15 குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பலருக்கும் இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா என மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் மாநராட்சி நிர்வாகம் சார்பிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் உடல்நலத்துடன் இருப்பதாகவும், கழிவுநீரை வெளியேற்றிய தனியார் நிறுவனத்தின் மீது ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து வெங்கமேடு பகுதியில் தனியார் சுத்திகரிப்பு ஆலையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post திருப்பூர் அருகே தனியார் சாய ஆலை கழிவுகளால் சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு: பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: