கொளுத்தும் வெயில், திடீர், திடீரென மழையால் வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலா தலங்கள்

பெரம்பலூர் : கொளுத்தும் வெயில். திடீர், திடீர் மழை. கோடை விடு முறை நீண்டும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோ டிக் கிடக்கிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் கிபி ஒன்பதாம் நூற்றாண் டில் பராந்தக சோழன் ஆட் சியில் கட்டப்பட்ட, வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலைவிட 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்ட ப்பட்டு தற்போது, இந்தியத் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள, முக்கிய சிவா லயங்களில் ஒன்றான அதிகப்படியான கல்வெட்டுகளைக் கொண் ட இந்த கோயிலில் கிருஷ் ணதேவராயர் ஆட்சிக் கால த்தில் கட்டப்பட்ட நடராஜர் மண்டபம், தரைக்குக் கீழ் உள்ள மண்டபங்களுடன் அமைக்கப்பட்ட தீர்த்தக் குளம், பிரமாண்ட நுழைவா யில் ஆகிய பிரமிப்புடன் விளங்கும் இக்கோயில் பெ ரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

வரலாற்றில் ஆ ங்கிலேய- பிரெஞ்சு கூட்டு படைகளுக்கு இடையே ந டைபெற்ற வால்கொண்டா போரின் முக்கிய தலமாக விளங்கிய துருவத்துக்கோ ட்டை எனப்படும் ரஞ்சன் குடி கோட்டை உள்ளது. பெ ரம்பலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கற்கோட்டை யின் உச்சியில் கடல் மட்ட த்திலிருந்து 152 அடி உயரத் தில் அமைந்துள்ள குளம் பிரசித்திப்பெற்றது. கொடி மரம், பீரங்கி மேடை, தண்ட னைக் கிணறு, காற்றுக்கா கவோ, தோட்டாக்களுக்காக வோ கோட்டையின் கீழ் நோக்கி அமைக்கப்பட்ட, துளைகளுடன் கூடிய சுற்று ச்சுவர், மிகப்பெரிய அகழி கள் பிரதானநுழைவாயில் கொண்ட இந்த கோட்டை யும் மாவட்டத்தின் முதன் மையான சுற்றுலாத் தலமா கவே உள்ளது.

அதேபோல் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி அரு கே செம்மலை,பச்சைமலை ஆகியவற்றை இணைத்து கலெக்டர் தரேஷ்அஹமது பணிக்காலத்தில் ரூ.33.67 கோடி மதிப்பீட்டில் 675 மீட்டர் நீளத்திற்கு, ரேடியல் ஷட்டர்களுடன் நீர்வள ஆ தாரத்துறை மூலம் அமைக் கப்பட்ட அணைக்கட்டு மாவ ட்டத்தின் பிரதான சுற்றுலா தளமாக உள்ளது. மேலும் சிலப்பதிகாரக் கண்ணகி யின் சினம்தணித்த தலமா கக் கருதப்படும், பில்லி சூ னியம், ஏவல், மாந்திரீகக் கட்டுகளை அவிழ்க்கக்கூ டிய முக்கியக் கோயிலாக விளங்கும், தங்கத்தோர் கொண்ட சிறுவாச்சூர் அ ருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் மாவட்டத் தின் சுற்றுலாத் தலமாக உள்ளது.அதேபோல் 12கோ டி ஆண்டுகளுக்கு முன்பு, வங்கக் கடல் வந்து போன இடமாக அறியப்படும், நில ப்பரப்பில் பூக்காத வகை தாவரத்தை சேர்ந்த மரம் ஒன்று, புதைந்து போய் கல்லாகிப் போன பூமியின் மிகப்பெரிய அதிசயமான 18மீட்டர் நீளமுள்ள சாத்த னூர் கல்மரம் மாவட்டத் தின் பெருமைக்குரிய சுற் றுலாத் தலமாக உள்ளது.

அதேபோல் ஸ்ரீரங்கம், திரு வானைக்கோயில், திருவி டை மருதூர் உள்ளிட்ட கோயில்களுக்கு இணையாக கட்டுமான பணியில் வே லைப்பாடுகளில் மிகச் சிற ந்ததாக கருதப்படும் வெங் கனூர் விருத்தா ச்சலேஸ்வரர் கோயில் பக்திமிகு சுற்றுலாத் தலமாக உள்ளது. பெரம்ப லூர் மாவட்டத்தின் பெரு மைகளை. பறைசாற்றும் இத்தகைய சுற்றுலா தலங் கள் இருந்தும், கோடை கா லத்தைக் கொண்டாட ஏற்ற தான சூழல் அமையாத தால் வரலாறு காணாதபடி க்கு சூட்டை கிளப்பும் வித மான கொளுத்தும் வெப் பம், இடி மின்னலுடன் திடீ ரென பெய்யும் மழை போ ன்றவற்றால் கோடைகாலம் என கருதப்படும் மே மாதம் முடிந்து, வெயில் காரண மாக பள்ளிகள் திறக்கப்ப டும் நாட்கள் இரண்டு வார ங்களுக்கு நீட்டிக்கப்பட்ட சூழலிலும் சுற்றுலாத்தலங் கள் பொதுமக்கள் இளை ஞர்கள் சுற்றுலா ஆர்வலர் கள் வருகை இன்றி வெறிச் சோடி கிடக்கிறது.

எனவே பெரம்பலூர் மாவ ட்ட நிர்வாகம், சுற்றுலாத்து றை, வளர்ச்சித்துறை, தொ ல்லியல்துறை ஆகியவற்று டன் கைகோர்த்து மேற்க ண்ட சுற்றுலாத்தலங்களு க்கு அனைவரும் வந்து செ ல்ல ஏதுவாக குடிநீர், கழிப் பறை, சிற்றுண்டி வசதிக ளை செய்து கொடுத்தால், கொளுத்தும் வெயிலிலும் தேடிச்சென்று கோடை விடு முறையைக்கொண்டாட மக் கள் காத்திருக்கின்றனர் எ ன்பதே நிதர்சனமான உண் மையாக உள்ளது.

The post கொளுத்தும் வெயில், திடீர், திடீரென மழையால் வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலா தலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: