பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் தலையில் வெட்டு காயத்துடன் போதையில் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு

*போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே கோவை ரோட்டில் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து ரகளை செய்ததுடன் தாலுகா அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்தார். பின்னர் சிறிதுநேரத்தில், நீதிபதியை அழையுங்கள் என சத்தம்போட்டுள்ளார். இதனால், தாலுகா அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார், விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர், தனது பெயர் ராமமூர்த்தி (32) எனவும், ஊர் மதுரை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், தலையில் வெட்டு காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த அந்த நபரை போலீசார் மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து போலீசார், அந்த நபரின் தலையில் எப்படி வெட்டு காயம் ஏற்பட்டது என்பது குறித்தும், என்ன காரணம் எனவும் விசாரிக்கின்றனர்.

The post பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் தலையில் வெட்டு காயத்துடன் போதையில் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: