தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாயின்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.

தற்போது சாலைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர மற்றும் 4 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார வாகனபயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்ககூடிய பணிகளானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தமிழகம் முழவதும் இதற்கான இடதேர்வு பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாகவும், இதில் முதற்கட்டமாக தேர்வு செய்யபட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊரக பகுதிகளில் இருக்க கூடிய தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்க கூடிய பணியானது நடைபெற்று வருவதாகவும், இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் நாளுக்கு நாள் அதனுடைய பயன்பாட்டை பொறுத்து அதனுடைய எண்ணிக்கை அதிகரிக்க பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால், மின் தேவையின் அளவும் அதிகமாகவுள்ளது. இந்த கோடைகாலம் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே அதற்கு அடுத்த படியாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்க கூடிய பணியானது விரைவில் தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: